திருவள்ளூர் அடுத்த பட்டரைபெரும்புதூர் கிராமத்தில் மயானக்கொள்ளை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. பக்தர்கள் அலகு குத்தி கிரேனில் தொங்கியபடி அம்மனுக்கு மாலை அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்திய நிலையில், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.