தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே சங்கராபுரம் கிராமத்தில் உள்ள கருப்பசாமி கோவிலில் நடிகர் தனுஷ் தனது இரு மகன்கள் மற்றும் பெற்றோருடன் சாமி தரிசனம் செய்தார். தனுஷின் சொந்த கிராமமான சங்கராபுரத்தில் உள்ள இக்கோவில் அவர்களது குலதெய்வமாகும். இட்லிகடை திரைப்படம் வெற்றிபெற வேண்டி தனுஷ் குலதெய்வத்தை வழிபட்டுள்ளார். பின்னர், பெற்றோரின் காலில் விழுந்து அவர் ஆசீர்வாதம் பெற்றார்.