கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே, நோய் தாக்குதல் காரணமாக சம்பங்கி மலர் சாகுபடி பாதிக்கப்பட்டதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். பெரும்பாக்கம் பகுதியில் ஒருவித நோய் தாக்குதலால் சம்பங்கி மலர்ச் செடிகள் அழுகி சேதமடைந்துள்ளது. இதுகுறித்து தோட்டக்கலைத் துறையினர் ஆய்வு செய்து இடுபொருள் மற்றும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என மலர் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.