தமிழகத்தில் பருவமழை தொடங்குவதற்கு முன்பாக, கர்நாடகாவிடம் இருந்து வரவேண்டிய 40 டிஎம்சி தண்ணீரை தமிழ்நாடு அரசு கேட்டு பெற வேண்டும் என டெல்டா விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சை மாவட்டம் பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் சம்பா பயிர் நடவு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.இந்த நிலையில், மேட்டூர் அணையின் நீர் மட்டம் படிப்படியாக குறைந்து வருதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். வரும் காலங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவித்தனர்.