மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில், சம்பா சாகுபடி பணிகளை முடிக்கும் முனைப்பில், விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு மற்றும் நடவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். வரும் நாட்களில் பருவமழை தீவிரமடைந்தால் சாகுபடி பணிகளில் தொய்வு ஏற்படும் என்பதால், நேரடி நெல் விதைப்பு பணிகளை முடிக்க விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.