மிலாடி நபியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், திண்டுக்கல் பகுதியில் படுஜோராக கள்ளச்சந்தையில் மதுப்பாட்டில்கள் விற்கப்பட்டன. ஓடைப்பட்டி பிரிவில் அமைந்துள்ள டாஸ்மாக் கடைக்கு அருகில் காலை முதலே மதுப்பாட்டில்கள் விற்பனை செய்யபட்ட நிலையில் மதுப்பிரியர்கள் ஏராளமானோர் வாங்கி சென்றனர்.மதுவிற்பனையாளர்கள் தண்ணீர் பாட்டில், ஊறுகாய் உள்ளிட்ட பொருட்களை மதுபிரியர்களுக்கு இலவசமாக வழங்கினர். இந்தநிலையில், அரசின் உத்தரவையும் மீறி மது விற்பனை செய்வதை போலீஸார் தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.