சேலத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசுக்கே லஞ்சம் கொடுத்த, வட்டார போக்குவரத்து ஆய்வாளர் கைது செய்யப்பட்டார். சேலம் கந்தம்பட்டி பைபாஸ் பகுதியில் உள்ள மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சதாசிவம். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் சேலம் லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி கிருஷ்ணராஜனை தொடர்பு கொண்டு, லஞ்ச ஒழிப்பு போலீசார் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு ரெய்டு வருவது குறித்து முன்பே தகவல் தெரிவிக்க வேண்டும் என கூறி முதற்கட்டமாக ஒரு லட்சம் ரூபாய் பணத்தை ஹோட்டலில் வைத்து லஞ்சமாக கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக கைது செய்தனர்.