கனியாமூர் பள்ளி கலவரத்தை தடுக்க வந்த சேலம் சரக டிஐஜி அபினவ் குமார் தாக்கப்பட்ட வழக்கு தொடர்பாக ஒரே நேரத்தில் 94 பேர் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர். கடந்த 2022 ஆம் ஆண்டு கள்ளக்குறிச்சி சின்னசேலம் அருகே உள்ள பள்ளியில் படித்து வந்த மாணவி ஸ்ரீமதி உயிரிழந்தது தொடர்பாக கலவரம் வெடித்தது. இதனை தடுப்பதற்காக சென்ற டிஐஜி அபினவ் குமார் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். இது தொடர்பாக மொத்தம் 119 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் 3 பேர் உயிரிழந்த நிலையில், விசாரணைக்காக 94 பேர் மட்டும் ஆஜராகினர். இதையடுத்து வழக்கை ஜூன் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்