தேர்வு கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என பெரியார் பல்கலைக்கழகத்தை வலியுறுத்தி சேலம் அரசு கல்லூரி மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.பல்கலைக்கழகத்தின் நிதிநிலையை சரிசெய்வதற்காக தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டதாக குற்றம்சாட்டிய மாணவர்கள், கட்டண உயர்வை திரும்ப பெறவில்லை என்றால் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக எச்சரித்தனர்.