சென்னை கோயம்போடு சந்தையில் சில்லறை விலையில் வெங்காயம், தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், தமிழக அரசு பண்ணை பசுமை நுகர்வோர் கடை மூலம் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 40 ரூபாய்க்கும், தக்காளி கிலோ 49 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த கடைகளில் ஒருவருக்கு அதிகபட்சம் 2 கிலோ மட்டும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.