சென்னை ஓஎம்ஆரில் பிறந்து ஒன்றரை மாதமேயான பெண் குழந்தையை விற்பனை செய்த தாய், தந்தை உட்பட 6 பேரை போலீஸார் கைது செய்தனர். கண்ணகி நகர் பகுதி எழில் நகரை சேர்ந்த ஸ்ரீதர் - வினிஷா தம்பதிக்கு ஏற்கெனவே 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த மே மாதம் 3-ஆவது பெண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து, வினிஷா தோழி சிவரஞ்சனி மூலம் திருவண்ணாமலையை சேர்ந்த தம்பதிக்கு 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர். இந்த விஷயம் தற்போது தெரியவரவே 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.