தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள ஆட்டு சந்தையில் ஒரு கோடி ரூபாய் வரையில் ஆடுகள் விற்பனையானது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வருகை தந்த வியாபாரிகள், 8 ஆயிரம் ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை விலை கொடுத்து ஆடுகளை வாங்கி சென்றனர்.