ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டையில் காவலர் தற்கொலைக்கு காரணமான நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சின்னப்பள்ளத்தில் உள்ள சோதனை சாவடியில் பணிபுரிந்து வந்த காவலர் செல்வகுமார், மதுபோதையில் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டுநர்களிடம் பணம் கேட்டு மிரட்டியதாக வீடியோ வெளியானது. இது தொடர்பாக, செல்வகுமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில், அவரை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர்.