சச்சின் படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ள நிலையில் மதுரையில் முக்கிய சாலைகள் வழியாக ஏராளமான விஜய் ரசிகர்கள் பைக்கில் ஊர்வலமாக திரையரங்கம் சென்றதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான சச்சின் படம் 20 ஆண்டுகள் ஆனத்தை ஒட்டி மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பைக்கில் ஊர்வலமாக சென்ற விஜய் ரசிகர்கள் சாலையின் நடுவே வாகனங்களை நிறுத்தி ஆடி பாடி அட்ராசிட்டியில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் அவதியடைந்தனர்.