சென்னை, திருவொற்றியூர் கடற்கரையில், வட மாநிலத்தவர்கள், சூரியனை வழிபடும், சாத் பூஜையை செய்து வழிபட்டனர்.சென்னையில் வசித்து வரும் வட மாநிலத்தவர்கள், பூ பழம், இனிப்பு மற்றும் நோன்பு கயிறு ஆகியவற்றை கூடைகளில் கடற்கரைக்கு எடுத்து வந்து, பூஜை செய்து வழிபட்டனர். 36 மணி நேரம் விரதமிருந்த பெண்கள் கடலில் இறங்கி, சூரிய உதயத்தை கண்டு, வணங்கி வழிபட்டனர். செளகார்பேட்டை, திருவொற்றியூர், சத்திய மூர்த்தி நகர், எண்ணூர், மணலி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் பூஜை செய்தனர். சூரியனை வழிபடும், இந்த சாத் பூஜையை, தங்களது குடும்பத்துடன் கடற்கரையில் தமிழகத்தில் வாழும் வட மாநிலத்தவர் கொண்டாடினர்.இதையும் பாருங்கள்... சாத் பூஜை..கடற்கரையில் கொண்டாட்டம்...! | Chhatch Pooja 2025