ஊதிய உயர்வு மற்றும் பணி பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கப் பணியாளர்கள் கும்மியடித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆறாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், திமுக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.