தீபாவளியை முன்னிட்டு நாளை முதல் 30ஆம் தேதி வரை சென்னையில் உள்ள கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் பேருந்து நிலையங்களில் இருந்து இயக்கப்படும் பேருந்துகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. சென்னையிலிருந்து தினசரி இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் நான்காயிரத்து 900 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.