தர்ப்பூசணி குறித்து வதந்தி பரப்பப்படுவதால், தர்பூசணி சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கவலை அடைந்திருப்பதாக விழுப்புரம் தோட்டக்கலை துணை இயக்குநர் தெரிவித்தார். சுவைக்காகவும், நிறத்திற்காகவும் தர்பூசணியில் ரசாயன மருந்தை ஊசி மூலம் கலப்பதாக கூறுவது வெறும் வதந்தி என்றவர், ஒருபோதும் விவசாயிகள் அவ்வாறு செய்ய மாட்டார்கள் என்றார்.