தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என்பது குறித்து, வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே ஆம்னி பேருந்துகளில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். ஆம்னி பேருந்துகளுக்கு முறையான சாலை வரி செலுத்தப்பட்டுள்ளதா? என ஆவணங்களை சரிபார்த்த ஆர்டிஓ அதிகாரிகள், பேருந்துகளில் இருந்த பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதா? என கேட்டறிந்தனர். இந்த சோதனையின் போது, பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகளுக்கு வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.