சென்னை மாநகராட்சிக்கு 60 லட்சம் ரூபாய் வரி செலுத்தாததால் நங்கநல்லூரில் உள்ள வெற்றிவேல், வேலன் திரையரங்குகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.ஆலந்தூர் 12 வது மண்டலத்துக்கு உட்பட்ட நங்கநல்லூர் எம்ஜிஆர் சாலையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக வெற்றி வேலன் காம்ப்ளக்ஸ் இயங்கி வருகிறது. இதில் வெற்றி மற்றும் வேலன் என 2 திரையரங்குகள் உள்ள நிலையில் 2018 ஆண்டில் இருந்து இந்த திரையரங்குகளின் உரிமையாளர்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய 60 லட்சம் ரூபாய் வரியை செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இந்நிலையில் வருவாய் துறை அதிகாரிகள் இரண்டு திரையரங்குகளுக்கும் சீல் வைத்தனர்.