திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட 75 லட்சம் ரூபாய் பணத்தை ரயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். ரயில் நிலையத்தில் அதிகாலை 2.30 மணியளவில் ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் செபாஸ்டின் தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த பயணிகளிடம் சோதனை மேற்கொண்ட போது, சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையை சேர்ந்த ஆரோக்கியதாஸ் என்பவர் உரிய ஆவணங்களின்றி 75 லட்சம் பணம் கொண்டு வந்தது தெரியவந்தது. தொடர்ந்து ரயில்வே பாதுகாப்பு படையினர் அளித்த தகவலின் பேரில் வருமான வரித்துறையினர் விசாரித்து வருகின்றனர்.