சென்னை ஆலந்தூரில் ஒரே இரவில் இரண்டு கடைகளில் கொள்ளையடிப்பதற்காக ஷட்டரை உடைத்த மர்ம நபர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. ஆலந்தூர் எம்.கே.எம் சாலையில் உள்ள பிகே மருந்தகத்தில் ஷட்டரை உடைத்து, முகமூடி அணிந்த இரண்டு கொள்ளையர்களை திருட முயன்றனர்.ஷட்டர் பின்புறம் கேட் இருந்த நிலையில் உள்ளே செல்ல முடியாததால் திரும்பி சென்ற அவர்கள் அதேசாலையில் உள்ள மளிகை கடையின் ஷட்டரை உடைத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.