தூத்துக்குடி மாவட்டம் பூப்பாண்டியாபுரத்தில் உள்ள மதுபான கடையில் புகுந்து சிசிடிவி கேமராவை கழட்டிவிட்டு 3 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடியவரை போலீசார் கைது செய்தனர். பூப்பாண்டியாபுரத்தில் உள்ள மதுகடையில் கல்லாவில் இருந்த பணம் மாயமாகியதை குறித்து அளித்த புகாரின் பேரில் விசாரித்ததில் பணத்தை திருடியது சக்திவேல் என்பது தெரிய வந்தது. இது தொடர்பான சிசிடிவி காட்சியும் வெளியாகி உள்ளது.