தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி 3 கோடி ரூபாய் வரை மோசடி செய்த youtube ஜோசியரிடமிருந்து பணத்தை மீட்டு தரவேண்டும் என பணத்தை இழந்தவர்கள் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தனர்.சிவகங்கை ஆலடி நத்தம் கிராமத்தை சார்ந்த பாண்டியன், அளித்த புகாரில் தூத்துக்குடி புங்கவர்நத்தம் பகுதியை சேர்ந்த ஜோசியர் பாலசுப்பிரமணியன், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு சென்ற போது அறிமுகமானதாகவும், அப்போது தனது பிரச்சனைகளை தீர்த்து வைப்பதாக கூறியதோடு, பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக சொல்லி 47 லட்சம் ரூபாய் பணத்தை பெற்று ஏமாற்றியதாக கூறியுள்ளார்.பாண்டியனை போன்று மேலும் சிலர் புகார் அளிக்க வந்தபோது ஜோசியர் பாலசுப்பிரமணியன் பலரிடம் மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது.