சேலம் மாவட்டத்தில் கிராம மக்களை ஏமாற்றி 2 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த பெண் மீது எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கெங்கவல்லி நாகியம்பட்டி பகுதியை சேர்ந்த பிரேமா, அரசு பள்ளியில் ஒப்பந்த துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வரும் நிலையில், அங்கன்வாடி ஆசிரியர் பணி, சத்துணவு அமைப்பாளர் பணி உள்ளிட்ட அரசு வேலைகள் வாங்கித் தருவதாகக் கூறி பணம் வாங்கியதாக புகார் அளிக்கப்பட்டது.