ஆந்திராவிலுள்ள ஏ.டி.எம்.களில் கொள்ளையடித்தது நாமக்கல்லில் சிக்கிய கேரள ஏ.டி.எம். கொள்ளை கும்பலா என்பது குறித்து விசாரிப்பதற்காக விசாகப்பட்டினம் போலீஸார் வருகை தந்துள்ளனர். கடந்த ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் விசாகப்பட்டினத்தில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கியின் 6 ஏ.டி.எம். மையங்களில் 1.6 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொள்ளைக்கும் கேரள ஏ.டி.எம். மைய கொள்ளைக்கும் பயன்படுத்தியது ஒரே கன்டெய்னர்தான் என்பது தெரியவந்துள்ளது. எனவே, அந்த கொள்ளை கும்பலிடம் விசாரிக்க முடிவு செய்து விசாகப்பட்டினம் போலீசார் வெப்படை காவல் நிலையத்துக்கு வந்துள்ளனர்.