தமிழ்நாட்டில் சைபர் கிரைம் குற்றங்கள் மூலம் கடந்த 9 மாதங்களில் ஆயிரத்து 500 கோடி ரூபாய் வரை மோசடி நடந்திருப்பதாக முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார். சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கில் மாணவர்கள் மத்தியில் பேசிய அவர், வங்கி கணக்குகள், otp களை வேறு யாருக்கும் கொடுக்க கூடாது என்றும், பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் கேட்டு கொண்டார்.