10 ஆயிரம் கோடி ரூபாய் நிதி அளித்தாலும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட மாட்டோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் வித்தாசலத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பேசிய அவர், மீண்டும் மீண்டும் வற்புறுத்தி இந்தியை திணிக்க நினைத்தால் தமிழினத்தின் தனி குணத்தை காட்ட வேண்டியிருக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.