செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே பட்டா மாற்றம் செய்ய 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் பாதிக்கபட்ட பச்சையப்பன் என்ற நபர் புகார் அளித்த நிலையில், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டை கொடுத்து விட்டு அதனை விஏஓ-விடம் வழங்கிய போது கையும் களவுமாக பிடித்தனர்.