அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, 15 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக, அரசு முன்னாள் மருத்துவர் மகன் மீது, திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் பெண்கள் புகாரளித்துள்ளனர். குடியாத்தத்தை சேர்ந்த அரசு முன்னாள் மருத்துவரான நாகராஜின் மகன் ஜெகநாதன் என்பவர், வாணியம்பாடியை சேர்ந்த பிரேமா உள்பட பல பெண்களிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, 15 லட்சம் ரூபாய் வரை பணம் வசூலித்துள்ளார். அதன்பின்னர் வேலை வாங்கி தராமலும், பணத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதாக ஜெகநாதன் மீது பெண்கள் குற்றம் சாட்டினர்.