போலீசாரின் என்கவுண்டருக்கு பயந்து, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ரவுடி சரணடைந்தார். கவியரசு என்ற அந்த ரவுடி, பிரபல ரவுடி கருப்பு பாலுவின் கூட்டாளி என கூறப்படுகிறது. கொரட்டூர் ஏரியில் சினிமா பைனான்சியரை கடத்தி எரித்து கொன்ற வழக்கு உள்பட 15-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய இவனை, திருமங்கலம் போலீசார் தேடி வந்தனர்.