பெண்ணை வழிமறித்து தாக்கி காரை பறித்து சென்ற ரவுடியை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர். ராம்குமார் என்பவரது பைனான்ஸ் கம்பெனியில் ஆவத்தி என்ற பெண் சீட்டுக்கு பணம் கட்டி வந்த நிலையில், அதனை திருப்பி கொடுக்காமல் வீரா என்ற ரவுடியை வைத்து மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் வீரா மீது புகார் அளித்த நிலையில், பிணையில் வந்த ரவுடி பெண்ணை பழிவாங்கியுள்ளார்.