காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து திருவள்ளூர் செல்லும் பேருந்து மணிக்கணக்கில் வராததால் ஆத்திரம் அடைந்த பயணிகள், நேரக் காப்பாளரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். தினந்தோறும் 2 மணி நேரத்துக்கு மேலாக காத்திருந்து பேருந்தில் ஏறி செல்ல வேண்டிய சூழல் உள்ளதாக புகார் கூறினர்.