நீலகிரி மாவட்டம் உதகையில் இரண்டாவது நாளாக நடைபெறும் ரோஜா மலர் கண்காட்சியை பார்வையிட ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். சுமார் 2 லட்சம் மலர்களை கொண்டு, உருவாக்கப்பட்ட கடல் வாழ் உயிரினங்கள் உள்ளிட்டவற்றின் உருவங்களை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள், அவற்றின் முன்பு நின்று புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். மேலும் தோட்டக்கலை துறை சார்பாக நடத்தப்பட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளையும் கண்டு ரசித்தனர்.