வருடாந்திர பராமரிப்பு பணிகளுக்காக பழனி முருகன் கோவிலில் ரோப் கார் சேவை 40 நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. ரோப் கார் சேவை மாதத்திற்கு ஒரு நாளும், வருடத்திற்கு ஒரு மாதமும் பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டு பராமரிப்பு பணிகளுக்காக அக்டோபர் 7 முதல் 40 நாட்களுக்கு ரோப் கார் சேவை நிறுத்தப்படுகிறது. பக்தர்கள் படிப்பாதை, யானை பாதை, இழுவை ரயில் மூலம் மலையேறி சாமி தரிசனம் செய்யுமாறு கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.