திண்டுக்கல் மாவட்டம் பழனி மலைக்கோயில் ரோப்கார் நிலையத்தில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் நாளை முதல் ரோப் கார் சேவை தொடங்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த ஜூலை 7 முதல் பராமரிப்பு பணிக்காக ரோப் கார் சேவை நிறுத்தப்பட்ட நிலையில் 35 நாட்களுக்கு பிறகு மீண்டும் தொடங்குகிறது.