மனித கழிவுகளை அகற்றும் ரோபோடிக் இயந்திரங்கள் விரைவில் தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்று, தூய்மை பணியாளர்கள் நலவாரியத் தலைவர் திப்பம்பட்டி ஆறுச்சாமி தெரிவித்துள்ளார். நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களுக்காக சிறப்பு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, ஆட்சியர் ஆகாஷ் தலைமையில் நடைபெற்றது. அதில் தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நலவாரியத் தலைவர் திப்பம்பட்டி ஆறுச்சாமி கலந்து கொண்டு, தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இதையும் படியுங்கள் : திண்டுக்கல் அருகே பெண் தூய்மைப் பணியாளர்கள் வேலை நிறுத்தம்..!