விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே கோயிலில் இரவுக் காவலில் இருந்த உள்ளூர்வாசிகள் இருவரை கொன்று, உண்டியலை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேவதானம் பகுதியில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயிலில், அதே ஊரைச் சேர்ந்த பேச்சிமுத்து மற்றும் சங்கரபாண்டியன் ஆகியோர் இரவு நேர காவலாளியாக பணி புரிந்து வந்தனர். இன்று காலை கோயிலை திறந்தபோது, இருவரும் பலத்த வெட்டுக் காயங்களுடன் உயிரிழந்து கிடந்தனர். கோயில் உண்டியலும் உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், ராஜபாளையம் போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.