நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் செம்மண் வெட்டியெடுக்கப்பட்டு கொள்ளையடிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பேளுக்குறிச்சி கணவாய் பகுதிகளில் பல அடி ஆழத்திற்கு செம்மண் வெட்டியெடுக்கப்பட்டு கொள்ளையடிக்கப்படுவதாக கூறப்படும் நிலையில், ஒரே பர்மீட்டை வைத்து 200 டிப்பர் லாரிகளில் மண் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும், சூரக்கோட்டை, சேந்தமங்கலம் மலைப்பகுதிகளிலும் செம்மண் கொள்ளை நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர் துணையுடன் தொடர்ந்து செம்மண் கொள்ளை அரங்கேறுவதாகவும் கூறப்படுகிறது.