கோவை மாவட்டம் சூலூர் அருகே நகைக் கடை அதிபருக்கு ஆசைக்காட்டி ஒரு கிலோ தங்க கட்டியை கொள்ளையடித்த இளம் சிறார் உட்பட 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த தங்க கட்டியை பறிமுதல் செய்தனர். கோவையில் சொந்தமாக இரண்டு நகைக்கடைகளை நடத்தி வரும் ஹரிசங்கர் என்பவரிடம் ஈரோட்டைச் சேர்ந்த சந்திரசேகர், கருப்பு பணத்திற்கு தங்க கட்டிகள் கேட்டதை நம்பி ஹரிசங்கர் தங்க கட்டிகளை எடுத்துக்கொண்டு சூலூர் பாப்பம்பட்டி பிரிவுக்கு சென்றார். அப்போது அங்கு வந்த சந்திரசேகரின் மேனேஜர் ராஜ்குமார், தங்க கட்டிகளை வாங்கி கொண்டு பணத்தை தராமல் ஏமாற்றி சென்ற நிலையில், ஹரிசங்கர் அளித்த புகாரில் போலீசார் குற்றவாளிகளை கைது செய்தனர்.