கோவை மாவட்டம் கோவில் பாளையம் அருகே வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 100 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப் பட்டது குறித்து 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. வளையாம்பாளையம் பகுதியை சேர்ந்த பாலசுப்ரமணியன் பொள்ளாச்சி அருகே விவசாயம் செய்து வருகிறார். இவர் கடந்த 30ஆம் தேதி மனைவியுடன் தோட்டத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பியபோது பீரோவிலிருந்து 100 சவரன் தங்க நகைகள் மற்றும் 75 கேரட் வைர நகைகள் திருடு போயிருந்தது தெரியவந்தது. இதேபோல் அதே பகுதியில் மற்றொரு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், எதும் கிடைக்காததால் திரும்பி சென்றனர்.