கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு செக்காரவிளை பகுதியை சேர்ந்த லலிதா என்ற பெண் மைலோடு பகுதியில் உள்ள தனது மகள் வீட்டிற்கு செல்வதற்காக திங்கள்நகர் பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக காத்து நின்றுள்ளார் அப்போது அங்கு வந்த மூன்று பெண்கள் லலிதாவின் கட்டப்பையில் இருந்த பர்ஸை லாவகமாக எடுத்து தப்பி சென்றுள்ளனர் பர்ஸில் 23 ஆயிரத்து 700 ரூபாய் இருந்த நிலையில் பர்ஸ் மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்த லலிதா உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாரிடம் தெரிவித்துள்ளார் இதனையடுத்து பேருந்து நிலையத்தில் இருந்து தப்பி செல்ல முயன்ற மூன்று பெண்களை பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த மூன்று பேரும் ஆந்திரா மாநிலம் சித்தூர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணம்மா, சுப்பம்மா மற்றும் கொலையம்மா என்பதும் பெண் பயணி லலிதாவின் கட்டப்பையில் இருந்த பர்ஸை திருடி சென்றதும் தெரியவந்தது இதனையடுத்து மூன்று பேரையும் கைது செய்து சிறையிலடைத்த இரணியல் போலீஸார் அவர்களிடம் இருந்த 23 ஆயிரத்து 700 ரூபாயையும் பறிமுதல் செய்தனர்.இதையும் படியுங்கள் : இரவு உணவு வாங்க சென்ற போது லாரி மோதியது