கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கோமங்கலம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் மதுபாட்டில்களை திருடி சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. லாக்கரில் இருந்த 7 லட்சம் ரூபாய் பணம் தப்பிய நிலையில், மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.