ஒரே நேரத்தில், 13 அரசு ஊழியர்களின் வீடுகளில் நகைகள் மற்றும் பணம் கொள்ளை. அடுத்தடுத்த வீடுகளை குறிவைத்து நேக்காக கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றிய 3 பேர். வடமாநிலத்தை சேர்ந்த 3 பேரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீசார். தற்போது கொள்ளையர் மீது பாய்ந்துள்ள குண்டர் சட்டம். கடந்த மாதம் நிகழ்ந்த கொள்ளை சம்பவத்தின் பின்னணி என்ன? கடந்த நவம்பர் மாசம் 28ஆம் தேதி. கோவை கவுண்டம்பாளையம் வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்புல உள்ள சிலர் வீட்ட திறந்ததும் ஷாக் ஆகிருக்காங்க. காரணம், பீரோவுல உள்ள லாக்கரை ஒடச்சி நகை, பணம் கொள்ளை அடிக்கப்பட்ருக்குது. ஏ பிளாக்ல 3 வீடு, சி3 பிளாக்ல 10 வீடுகள்னு மொத்தம் 13 வீடுகள்ல 56 சவரன் நகை, 3 லட்சம் ரொக்கம், வெள்ளிப் பொருட்கள் கொள்ளை போனதால், அந்த வீட்ல உள்ளவங்க ஒண்ணாபோய் போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைண்ட் குடுத்துருக்காங்க. அந்த, வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்புல மொத்தம் 1,848 வீடுகள் இருக்குது. அதுல, பலர் காலையில வேலைக்குப்போனா நைட் தூங்கதான் வீட்டுக்கே வருவாங்க. அதனால, பெரும்பாலான வீடுகள்ல யாருமே இருக்கமாட்டாங்க. அப்டி பூட்டி கிடக்குற வீடுகளை குறிவச்சிதான் நகையும், பணம் கொள்ளையடிக்கப்பட்ருக்குது.இந்த கொள்ளை சம்பவம் தொடர்பா வழக்குப்பதிவு பண்ணி விசாரணையில இறங்குன போலீசார், வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகள்ல உள்ள எல்லா சிசிடிவி கேமரா பதிவுகளையும் செக் பண்ணாங்க. அதுல, 3 பேரு ஆட்டோவுல வந்து இறங்குறதும், அதுக்குப்பிறகு கொள்ளையடிச்சிட்டு சாதாரண குடியிருப்புவாசி மாதிரி அலட்டிக்காம நடந்துபோற காட்சியும் பதிவாகி இருந்துச்சு. அடுத்து, அந்த 3 பேரோட போட்டோக்களையும் எல்லா போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் அனுப்பி தேடிருக்காங்க. அப்போ, குனியமுத்தூர் குளத்துப்பாளையம் பகுதியில உள்ள ஒரு வீட்டுல அந்த 3 பேருமே இருக்குறதா தகவல் போலீசுக்கு கிடைச்சிருக்குது. அடுத்து அங்கபோன போலீசார், உத்தரபிரேதச மாநிலம் மஜித்புரா பகுதியை சேர்ந்த ஆசிக், இர்பான், கல்லு ஆகிய 3 பேரையும் சுத்தி வளைச்சிருக்காங்க. ஆனா, அந்த பேரும் தலைமை காவலர் பார்த்திபனை அரிவாளால வெட்டிட்டு தப்பி ஓடிருக்காங்க. அப்போ, துப்பாக்கியால சுட்டு 3 பேரையும் பிடிச்சிருக்காங்க போலீசார். அதுக்குப்பிறகு, கோவை அரசு மருத்துவமனையில 3 பேரும் சிகிச்சையில அனுமதிக்கப்பட்ருந்தாங்க. அதுல, ஆசிக் சிகிச்சை பலன் இல்லாம உயிரிழந்துட்டாரு. அதுக்குப்பிறகு மத்த ரெண்டுபேரையும் சிகிச்சை முடிஞ்சதும் போலீசார் சிறையில அடைச்சாங்க. இதுக்குமத்தியில அந்த ரெண்டுபேர் மேலயும் குண்டர் சட்டம் பாஞ்சிருக்குது.