கரூர் மாவட்டம், குளித்தலை அருகே அய்யர் மலையில். கடல் மட்டத்திலிருந்து 1071 அடி உயரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ரத்னகிரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. மலை உச்சியில் உள்ள சிவனை தரிசனம் செய்வதற்காக முதியோர், மாற்றுத்திறனாளிகள் சென்று வருவதற்காக ரோப் கார் வசதி அமைக்கப்பட்டுள்ளது. ஆடி மாதத்தில் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததாலும், பராமரிப்புக்காகவும், கடந்த ஜூலை 22ஆம் தேதி சேவை நிறுத்தப்பட்டது. 48 நாட்கள் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்ட பிறகு, கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி ரோப் காரை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்த பின்னர், 9ஆம் தேதி முதல் பக்தர்கள் பயன்பாட்டிற்காக ரோப் கார் சேவை தொடங்கியது. இதனை அடுத்து, உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த பக்தர்கள் ரோப்கார் மூலம் மலை உச்சியுள்ள சிவனை தரிசனம் செய்தனர்.