தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் அருகே கனரக வாகனங்களால் சாலைகள் சிதிலமடைந்து, வாகன ஓட்டிகள் சிரமம் அடைவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சந்திரகிரியில் உள்ள கல்குவாரியில் இருந்து தினமும் 300க்கும் மேற்பட்ட கனரக வாகனங்களில் அதிகளவில் லோடு ஏற்றிச் செல்வதால், முள்ளூரில் இருந்து சந்திரகிரி வழியாக குறுக்குச்சாலை செல்லும் சாலைகள், குளத்தூர் செல்லும் சாலைகள் ஆகியன மோசமாக சேதமடைந்து சேறும் சகதியுமாக காட்சியளிக்கின்றன. இதனால், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமம் அடைவதாக தெரிவித்த மக்கள் சாலையை சீரமைத்துத் தர கோரிக்கை விடுத்தனர்.