வேலூர் மாவட்டம் மேட்டு பஜார் தெருவில் சேதமடைந்து காணப்படும் சாலையை சீரமைக்க கோரி அப்பகுதியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 5 ஆண்டுகளுக்கு மேல் குண்டும் குழியுமாக உள்ள நிலையில் அவ்வழியாக செல்பவர்கள் கடும் சிரமத்தை எதிர் கொள்வதாக புகார் தெரிவித்தனர்.