திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த அம்மையப்பன் வட்டத்தில் சீரான குடிநீர் வழங்கப்படாததைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாக்கனூர் கூட்ரோடு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் ஜோலார்பேட்டை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.