திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே இடியும் நிலையில் உள்ள தடுப்பணையால், 2 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். விக்ரபாண்டியம், ராமச்சந்திரபுரம், சோமாசி பல்லவராயன் கட்டளை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும் வகையில், புழுதிகுடியில் 25 ஆண்டுகளுக்கு முன் தடுப்பணை கட்டப்பட்டது. தற்போது இந்த தடுப்பணை பழுதடைந்து இடியும் நிலையிலும், கதவுகள் ஏற்றி இறக்க முடியாத சூழல் உள்ளதாக கூறும் விவசாயிகள் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தடுப்பணையை ஆய்வு செய்து புதிய தடுப்பணை கட்டித் தர கோரிக்கை விடுத்தனர்.