தகவல் அறியும் உரிமை வாரத்தை முன்னிட்டு, பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கல்லூரி மாணவ, மாணவிகளின் மாரத்தான் போட்டி நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அரசு கலைக்கல்லூரியில் தகவல் அறியும் உரிமை வாரத்தை முன்னிட்டு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அவசியம் மற்றும் பயன்பாடு குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மாரத்தான் போட்டி நடைபெற்றது. பொன்னேரி அரசு கலைக் கல்லூரியில் தொடங்கிய இந்த மாரத்தான் போட்டியில், கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். பொன்னேரி கல்லூரியில் தொடங்கிய இந்த பேரணி, வட்டாட்சியர் அலுவலகம், தடப்பெரும்பாக்கம், கொக்குமேடு, புளிக்குளம் சென்று, மீண்டும் கல்லூரி வளாகத்துக்கு திரும்பும் வகையில் 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர்கள் ஆர்வமுடன் பங்கேற்று இலக்கை அடைந்தனர். தகவல் அறியும் உரிமை வாரத்தை முன்னிட்டு, கல்லூரி மாணவர்கள் இடையே பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, வினாடி வினா, விவாத அரங்கம் உள்ளிட்டவையும் நடைபெற்றது.--